பொள்ளாச்சி அருகே காளை மாட்டு வண்டி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், காளைமாடு ஒன்று உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே காளை மாட்டு வண்டி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், காளைமாடு ஒன்று உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(38), அவரது அண்ணன் பிரகாஷ்(40) இருவரும், நேற்று தை அமாவாசையை முன்னிட்டு காளை மாட்டு வண்டியில் திருமூர்த்திமலைக்கு தரிசனத்திற்குச் சென்றுள்ளனர்.
தரிசனம் முடித்து விட்டு மாலை மீன்கரை சாலை வழியாக மீனாட்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால், வந்த கார் ஒன்று மாட்டு வண்டி மீது மோதியது. இதில், மாட்டு வண்டியிலிருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது. மேலும், விபத்தில் காளை மாடு ஒன்று உயிரிழந்தது. இதையடுத்து, இவர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், காரை இயக்கி வந்த பெரியபோது பகுதியைச் சேர்ந்த மணிக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.