நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் சிறந்த பட்ஜெட்: கொ.மு.க., தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி பேட்டி

கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிரதமருக்கும், சிறப்பான முறையில் பட்ஜெட் வழங்கிய நிதி அமைச்சருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக, கொ.மு.க., தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிரதமருக்கும், சிறப்பான முறையில் பட்ஜெட் வழங்கிய நிதி அமைச்சருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக, கொ.மு.க., தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு முன்னேற்றக் கழக நிறுவனத்தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி திருப்பூரில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இயற்கை உரம் மூலம் விவசாய முறை செய்து விவசாயத்தைப் பேணி காப்பது நமது கடமை என்பதை தனது பட்ஜெட் மூலம் தந்துள்ளார்.

26,000 கி.மீட்டர் தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தும் திட்டமும், மேலும் அடுத்த நிதியாண்டில் 22 ஆயிரம் 2000 கிமீட்டர் தொலைவிற்கு உலகத்தரத்திற்கு ஈடாக சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் மிகச் சிறப்பாகும்.

நமது நாட்டின் நீண்டகால முன்னேற்றத்திற்கும், சாலைப் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். 400 வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் (2023) ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு 2 உருவாக்கப்படுவது சிறப்பான அறிவிப்பாகும்.

கோதாவரி - கிருஷ்ணா-காவேரி-பெண்ணாறு நதிகள் இணைப்புத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், திநீர் இணைப்புத் திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தமைக்கு மிக்க நன்றி.

சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கு ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டம் சிறப்பானது. சுயச்சார்பு திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், சிறு நிருவனங்களுக்க கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது சிறப்பு.

டிஜிட்டல் முறையிலான கற்பித்தலும், உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்பு. டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் 200 கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

நடப்பாண்டில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்றும், அனைத்து கிராமங்களுக்கும் இ-சேவை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அறிவித்தது சிறப்பானது. மொத்தத்தில், மத்திய அரசின் 2022-2023 ஆண்டிற்கான இந்த பட்ஜெட் நதிநீர் இணைப்பு, விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத்துறை, 5 ஜி சேலை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்றும் நமது நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிரதமர் அவர்களுக்கும், சிறப்பான முறையில் பட்ஜெட் வழங்கிய நிதி அமைச்சருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று பெஸ்ட் எஸ்.ராமசாமி கூறினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...