கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

பல்லடம் அருகே கோவையிலிருந்து ஈரோட்டிற்கு கம்ப்ரசர் இயந்திரம் ஏற்றி கொண்டு சென்ற டாடா ஏஸ் வாகனம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.



கோவை: பல்லடம் அருகே கோவையிலிருந்து ஈரோட்டிற்கு கம்ப்ரசர் இயந்திரம் ஏற்றி கொண்டு சென்ற டாடா ஏஸ் வாகனம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.

கோவை கணபதிபாளையத்தில் இருந்து கம்ப்ரசர் இயந்திரங்களை ஏற்றி கொண்டு ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு டாடா ஏஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது.

வாகனத்தை ஈரோட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவர் ஓட்டி வந்தார். வாகனம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வந்து கொண்டிருந்த போது வாகனத்திலிருந்து கரும்புகை வந்தது.



இதனை பார்த்த ஓட்டுனர் சுதாகர் உடனடியாக வாகனத்திலிருந்து கீழே இறங்கினார். அப்பொழுது திடீரென வாகனத்தில் தீ பற்றியது.



வாகனத்தின் முன் புறம் பற்றிய தீ மளமளவென எரிந்தது. உடனடியாக பல்லடம் தீ அணைப்பு துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.



தகவல் கிடைத்துத் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடம் வருவதற்குள் வாகனம் மற்றும் வாகனத்தில் கம்ப்ரசர் இயந்திரம் முற்றிலுமாக சேதமடைந்தது.



இந்த தீ விபத்தினால் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து அவினாசிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...