மத்திய பட்ஜெட்: சிறு-குறு தொழில்களுக்கு எந்த விதத்திலும்‌ ஏற்றம்‌ இல்லை- கொசிமா

குறு மற்றும்‌ சிறு தொழில்களுக்கு வழங்கப்படும்‌, கடன்களுக்கு 5-சதவிகித வட்டி வேண்டும்‌ என்ற, கோரிக்கையைக் கருத்தில்‌ கொள்ளவில்லை. ஆக மொத்தம்‌ இந்த நிதிநிலை அறிக்கை சிறு குறு தொழில்களுக்கு எந்த விதத்திலும்‌ ஏற்றம்‌ இல்லை என கொசிமா தெரிவித்துள்ளது.


கோவை: மத்திய பட்ஜெட்டில், சிறு குறு தொழில்களுக்கு எந்த விதத்திலும்‌ ஏற்றம்‌ இல்லை என கொசிமா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் கூறியுள்ளதாவது:-

இன்று மத்திய நிதியமைச்சர்‌ தாக்கல்‌ செய்த நிதிநிலை அறிக்கையில்,‌ சிறு குறு தொழில்களுக்கு வழங்கும்‌ அவசரகாலகடன்‌ திட்டத்தை 2023-வரை நீட்டிப்பு செய்ததை வரவேற்கிறோம்‌.

அதேபோல்‌, மூன்று ஆண்டுகளில்‌ ரயில்வேயில்‌ 400-புதிய ரயில்கள்‌ வந்தே பாரத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இயக்கப்படுவதையும்‌, சோலார்‌ மின்‌ உற்பத்திக்கு 19500/- கோடி நிதி உதவி அளித்ததையும்‌, ராணுவத் தளவாட உற்பத்தியில்‌ 68-சதவிகிதம்‌ உள்நாட்டில்‌ உற்பத்தி செய்ய ஊக்கம்‌ அளிப்பதையும்‌, நாங்கள்‌ வரவேற்கிறோம்‌.

அதேபோல்‌, நாங்கள்‌ எதிர்பார்த்த தனிநபர்‌ வருமான வரி விதிப்பு வரம்பு உயர்த்தப்படும்‌ என்று எதிர்‌ பார்த்தோம்‌ ஏமாற்றமளிக்கிறது. அதேபோல்‌ GST JOB WORK 5% ஆக குறைக்க வேண்டும்‌ என்ற எங்கள்‌ கோரிக்கை ஏமாற்றமளிக்கிறது.

மேலும்‌, சிறு குறு தொழில்களுக்கு மூலதன கடன்‌ மானியம்‌ அதிகரிக்க வேண்டும்‌, என்று எதிர்பார்த்தோம்‌. அதுவும்‌ ஏமாற்றமளிக்கிறது.

குறு மற்றும்‌ சிறு தொழில்களுக்கு வழங்கப்படும்‌, கடன்களுக்கு 5-சதவிகித வட்டி வேண்டும்‌ என்ற, கோரிக்கையைக் கருத்தில்‌ கொள்ளவில்லை. ஆக மொத்தம்‌ இந்த நிதிநிலை அறிக்கை சிறு குறு தொழில்களுக்கு எந்த விதத்திலும்‌ ஏற்றம்‌ இல்லை என்பது எங்கள்‌ கருத்து.

இவ்வாறு கொசிமா தெரிவித்துள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...