பணம் மற்றும் பரிசு பொருட்கள் பரிமாற்றம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக நீலகிரி மாவட்ட காவல் துறையின் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 978980-0100 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.
நீலகிரி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஏதுவாக, தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்க பிரத்யேக எண்ணை, நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆஷிஷ் ராவத் அறிவித்துள்ளார்.
"லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். எனவே, பணம் பட்டுவாடா, பொருள்கள், உணவு மதுபான வகைகள் வழங்குதல் குறித்து தகவல் தெரிய வரும் பட்சத்தில், உடனடியாக பொதுமக்கள் நீலகிரி மாவட்ட காவல் துறையின் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 978980-0100 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்", என்று நீலகிரி மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து, பொதுமக்கள் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றும் அவ்வாறு தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும், தக்க சன்மானம் வழங்கப்படும், என்று அவர் தெரிவித்துள்ளார்.