மத்திய பட்ஜெட்: குறு-சிறு தொழில்‌ முன்னேற்றத்திற்கான அறிவிப்பு இல்லாதது பெரும்‌ ஏமாற்றம்

மத்திய அரசு அறிவித்து உள்ள 2022 to 2023 -கான பட்ஜெட்டில்‌ சில அறிவிப்புகள்‌ வரவேற்கதக்கதாக இருந்தாலும்‌, பெரும்‌ அளவில்‌ குறு-சிறு தொழில்‌ முன்னேற்றத்திற்கான அறிவிப்பு இல்லாதது பெரும்‌ ஏமாற்றம்‌ அளிப்பதாக, தமிழ்நாடு கைத்தொழில்‌ மற்றும்‌ குறுந்தொழில்‌ முனைவோர்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது.



கோவை: மத்திய அரசு அறிவித்து உள்ள 2022 to 2023 -கான பட்ஜெட்டில்‌ சில அறிவிப்புகள்‌ வரவேற்கதக்கதாக இருந்தாலும்‌, பெரும்‌ அளவில்‌ குறு-சிறு தொழில்‌ முன்னேற்றத்திற்கான அறிவிப்பு இல்லாதது பெரும்‌ ஏமாற்றம்‌ அளிப்பதாக, தமிழ்நாடு கைத்தொழில்‌ மற்றும்‌ குறுந்தொழில்‌ முனைவோர்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில்‌ மற்றும்‌ குறுந்தொழில்‌ முனைவோர்‌ சங்கம்‌ (TACT) கூறியுள்ளதாவது:-







மத்திய அரசு அறிவித்து உள்ள 2022 to 2023 -கான பட்ஜெட்டில்‌ சில அறிவிப்புகள்‌ வரவேற்க தக்கதாக இருந்தாலும்‌ பெரும்‌ அளவில்‌ குறு சிறு தொழில்‌ முன்னேற்றத்திற்கான அறிவிப்பு இல்லாதது பெரும்‌ ஏமாற்றம்‌ அளிக்கிறது.

1. குறு-சிறு நிறுவனங்களுக்கு 2 லட்சம்‌ கோடி ஒதுக்கீடு

2. 68% சதம்‌ ராணுவ தளவாடங்கள்‌ உள்‌ நாட்டில்‌ உற்பத்தியில்‌ கொள்முதல்‌ செய்வது

3. அரசு நிறுவனங்கள்‌ சிறு குறு தொழில்‌ நிறுவனங்களுக்கு 7 நாட்களுக்குள்‌ முழுத்தொகையை முழுமையாகக் கொடுக்க வேண்டும்‌.

4. 50,000 யிரம்‌ கோடி ECLGS கடன்‌ திட்டம்‌ மூலம்‌ வழங்க ஒதுக்கீடு வரவேற்க தக்கதாக இருப்பினும்‌ குறு-சிறு தொழில்களின்‌ நடைமுறையில்‌ உள்ள சிக்கலிலிருந்து பாதுகாக்க எவ்விதமான அறிவிப்பும்‌ இல்லாதது ஏமாற்றம்‌ அளிக்கிறது குறிப்பாக கொரோனா பாதிப்பு மூலப்பொருள்‌ விலை ஏற்றம்‌ உள்ளிட்டு பிரச்சனைகளால்‌ முடங்கி இருக்கும்‌ குறு சிறு தொழில்களுக்கு உதவிட முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்‌

1. ஜாப்‌ஆடர்களுக்கான GST-5% சதம்‌ கோரிக்கை ஏற்கப்படவில்லை

2. தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து குறு சிறு தொழில்களைப் பாதுகாக்க கொரோனா பாதித்த காலத்தில்‌ இருந்து 2023 வரை எவ்விதமான ஜப்தி நடவடிக்கைகள்‌ எடுக்கக் கூடாது என்ற கோரிக்கை மற்றும்‌ மேற்கண்ட காலத்துக்கு வங்கிகள்‌ விதிக்கும்‌ அபராத வட்டிகள்‌ அரசு பொறுப்பு எடுக்க வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

3. குறு-சிறு தொழில்களுக்கான தனி அமைச்சகம்‌ உருவாக்கிட வைத்த கோரிக்கை ஏற்கவில்லை.

4. தனிநபர் வருமான வரி எந்தவித மாற்றமும்‌ இல்லை ஏமாற்றம்‌ அளிக்கிறது. குறுந்தொழில்களுக்கான தனிகடன்‌ திட்டம்‌ குறைந்த வட்டியில்‌ வழங்கிட அறிவிப்பு வரும்‌ என்ற எதிர்பார்ப்பும்‌ ஏற்கப்படவில்லை வரும்‌ பட்ஜெட்‌ கூட்டத்தொடரில்‌ குறுந்தொழில்களின்‌ பிரச்சனைகளைத் தீர்பதுக்கான அறிவிப்புகள்‌ அறிவித்து தொழில்களைப் பாதுகாத்திட வேண்டுகிறோம்‌.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...