கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள அம்பாள் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை. செட்டிபாளையம் போலீசார் கைரேகைகளை சேகரித்து விசாரணை.
கோவை: கோவை மலுமிச்சம்பட்டியில், பெண் டெய்லர் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு குறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள அம்பாள் நகரைச் சேர்ந்தவர் சசிரேகா வயது 39. இவர், அதே பகுதியில் தையல் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இன்று வீடு திரும்பிய அவர், வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, உடனே சசிரேகா செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பீரோவில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.