சிறுவாணி அணை நீர் சேமிப்பை பராமரிக்க கோரி கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்

கோவை மாநகராட்சி மற்றும்‌ சிறுவாணி குடிநீர்‌ திட்டப்‌ பயனாளிகளுக்குத் தங்கு தடையின்றி குடிநீர்‌ வழங்கிடச் சிறுவாணி அணையில்‌ நீர்‌ சேமிப்பைப்‌ பராமரிக்கவும்‌, குடிநீர்‌ விநியோகத்தை மேலும்‌ அதிகரிக்கவும்‌ கேரள அரசுக்கு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ கடிதம்.



கோவை: கோவை மாநகராட்சி மற்றும்‌ சிறுவாணி குடிநீர்த்‌ திட்டப்‌ பயனாளிகளுக்குத் தங்கு தடையின்றி குடிநீர்‌ வழங்கிடச் சிறுவாணி அணையில்‌ நீர்‌ சேமிப்பைப்‌ பராமரிக்கவும்‌, குடிநீர்‌ விநியோகத்தை மேலும்‌ அதிகரிக்கவும்‌ கேரள அரசுக்கு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ வலியுறுத்தி உள்ளார்.

சிறுவாணி குடிநீர்த்‌ திட்டத்தின்மூலம்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ இத்திட்டப்‌ பயனாளிகளுக்குத் தங்கு தடையின்றி குடிநீர்‌ வழங்கிடச் சிறுவாணி ஆணையின்‌ சேமிப்பைப் பராமரிக்கவும்‌, சிறுவாணி அணையிலிருந்து குடிநீர்‌ விநியோகத்தை மேலும்‌ அதிகரிக்கவும்‌ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக்‌ கோரி, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌‌, கேரள முதலமைச்சர்‌ பினராயி விஜயனுக்கு இன்று (1-2-2022) கடிதம்‌ எழுதியுள்ளார்‌.

அக்கடிதத்தில்‌, கோயம்புத்தூர்‌ நகருக்கு தண்ணீர்‌ வழங்கவேண்டிய முக்கிய ஆதாரமாகச் சிறுவாணி அணை உள்ளது என்றும்‌, தற்போது கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கான மொத்த நீர்த்‌ தேவையான 265 மில்லியன்‌ லிட்டரில்‌, 101.4 மில்லியன்‌ லிட்டர்‌, சிறுவாணி அணையை ஆதாரமாகக்‌ கொண்டு இருப்பதாகத்‌ தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர்‌, சிறுவாணி அணையிலிருந்து ஆண்டுதோறும்‌ 1.30 டி.எம்‌.சி.க்கு மிகாமல்‌ (ஜூலை 1 முதல்‌ ஜூன்‌ 30 வரை) குடிநீர்‌ வழங்கும்‌ வகையில்‌, தமிழ்நாடு அரசுக்கும்‌ கோள அரசுக்கும்‌ இடையே ஒப்பந்தம்‌ செய்து கொள்ளப்பட்டுள்ளதைக்‌ குறிப்பிட்டு, ஆயினும்‌ கடந்த ஆறு ஆண்டுகளில்‌, கேரள அரசு 0.484 டி.எம்‌.சி.-யிலிருந்து 1.128 டி.எம்‌.சி அளவிற்குத்தான்‌ தண்ணீரை வழங்கியுள்ளது என்று புள்ளி விவரங்களுடன்‌ சுட்டிக்காட்டியுள்ளார்‌.

கடந்த மூன்று ஆண்டுகளாக, சிறுவாணி நீர்ப்பிடிப்புப்‌ பகுதிகளில்‌ போதுமான அளவிற்கு மழை பெய்துள்ள போதிலும்‌, கேரள நீர்ப்பாசனத்‌ துறை, முழு நீர்த்தேக்க மட்டத்திற்குப் பதிலாக, இருப்பு நிலையைக்‌ குறைத்துப்‌ பராமரிக்கிறது என்பது தனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்‌, அணையின்‌ நீர்‌ மட்டம்‌ குறைவதால்‌, இத்திட்டப்‌ பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்ட அளவைவிடக் குறைத்த அளவில் தான்‌ தண்ணீரை வழங்க முடிகிறது என்றும்‌ முதலமைச்சர்‌ கோடிட்டுக் காட்டியுள்ளார்.‌

சிறுவாணி அணையில்‌ முழு நீர்த்தேக்கம்‌ வரை நீரைச்‌ சேமித்து வைக்கத் தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அதிகாரிகள்‌ கேரள நீர்ப்பாசனத்‌ துறை அதிகாரிகளுடன்‌ வழக்கமான கூட்டங்களை நடத்தி வருவதாகவும்‌, இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை, கேரளா அரசின்‌ நீர்வள ஆதாரத்‌ துறையின்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளரையும்‌ அணுகியுள்ளதாகவும்‌ குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்‌, பலமுறை தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ கோரிக்கைகள்‌ விடுக்கப்பட்ட போதிலும்‌, கேரள நீர்ப்பாசனத்‌ துறை, 878.50 மீட்டர்‌ அளவிற்கு, அதாவது, முழு நீர்த்தேக்க மட்டம்‌ வரை, சிறுவாணி அணையின்‌ நீர்‌ இருப்பின்‌ மட்டத்தைப்‌ பராமரிக்க எந்த நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை என்றும்‌, முழு கொள்ளளவிற்கு நீரைச்‌ சேமித்து வைக்காவிட்டால்‌, சிறுவாணி நீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி மற்றும்‌ அதன்‌ சுற்றுப்புறப்‌ பகுதிகள்‌, அடுத்த கோடைக்காலத்தில்‌ கடுமையாகப் பாதிக்கப்படும்‌ என்றும்‌ தெரிவித்துள்ளார்‌.

மேலும்‌, கேரள நீர்ப்பாசனத்‌ துறை, 03.01.2022 முதல்‌ நீர்வரத்து வரும்‌ வால்வ்‌-4-ஐ தனது சுட்டுப்பாட்டில்‌ னலத்துள்ள சூழ்நிலையில்‌, சேரன அரசின்‌ மறு உத்தரவு வரும்‌ வரை இந்த வால்வ்‌-4-ன்‌ ஒட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாது என்றும்,‌ கேரள நீர்ப்பாசனத்‌ துறையால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதையும்‌ தனது கடிதத்தில்‌ முதலமைச்சர்‌ கோடிட்டுக்‌ காட்டியுள்ளார்‌.

இந்த விஷயத்தில்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ இத்திட்டத்தின்‌ பிற பயனாளிகளுக்கு தடைமின்றி குடிநீர்‌ வழங்கும்‌ வகையில்‌, எதிர்காலத்தில்‌ 878.50 மீட்டர்‌ வரை, சிறுவாணி அணையின்‌ நீர்‌ சேமிப்பைப்‌ பராமரிக்கவும்‌, மேலும்‌, 101.40 மில்லியன்‌ லிட்டர்‌ குடிநீர்‌ வழங்க ஏதுவாக, சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுகு உத்தரவிடவேண்டும்‌ என்று கேரள முதலமைச்சர்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ வலியுறுத்தியுள்ளார்‌.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...