கோவை சலீவன் வீதி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
கோவை: கோவையில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அதிகாரியாக பிஜு அலெக்ஸ் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோவை சலீவன் வீதி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இரண்டு குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. ஆனால் அவர்களை பணியில் அமர்த்தி இருந்த நிறுவனத்தின் உரிமையாளர் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என கூறினார்.
இதனையடுத்து, அந்த இரண்டு சிறுவர்களுக்கும் கோவை அரசு மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவர்கள் 16 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர், இந்த சிறுவர்களை பணியில் அமர்த்திய சலீவன் வீதி பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் ஷேக் என்பவர் மீது வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.