தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்களால் சமூக ஆர்வலர்களின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது என்று தெரிவித்தனர்.
கோவை: கோவை தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வந்த செங்கல் சூளைகளை மூடுவது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த டி.எம்.எஸ் ராஜேந்திரன் என்பவருடைய மனைவிக்கு, தனியார் செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் அவரது தம்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர், என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
"செங்கல் சூளைகள் மூடப்பட்டதால், பல லட்சம் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு காரணமாக இருந்த உங்கள் குடும்பத்தை அழித்து விடுவோம்", என்று மிரட்டியதாக, டி.எம்.எஸ் ராஜேந்திரன் என்பவருடைய மனைவி பேபி தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின், இன்று தனது விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, ஜே.ஜே செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் சுபாஷ் அவருடைய தம்பி ஆகியோர் தன்னை அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், செங்கல் சூளைகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியதாக, பேபி தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
"உங்களால் தான், எங்கள் தொழிலில் இந்த அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தை அறுத்து, கொன்று விடுவோம்", என்று மிரட்டியதாக பேபி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், டி.எம்.எஸ் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பேபி இருவரும் தடாகம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து தாக்குதல் நடத்திய செங்கல் தொழிற்சாலை உரிமையாளர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
செம்மண் சுரண்டலை எதிர்த்து வழக்கு தொடுத்த சமூக ஆர்வலர்கள் மீது கொலை மிரட்டல் மற்றும் தாக்குதல், நடத்துவது என்பது தொடர் கதையாகி வரும் சூழலில், இது போன்ற செயல்களில் ஈடுபடும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
முந்தைய காலகட்டங்களில், சமூக ஆர்வலர்கள் டி.எம்.எஸ் ராஜேந்திரன், கணேஷ், மருத்துவர். ரமேஷ் ஆகியோரின் வீடு மற்றும் மருத்துவமனை மீது பல்வேறு தாக்குதல்கள், கொலை மிரட்டல்கள் நடத்தப்பட்டன. ஆனால், இன்றளவும் இது தொடர்ந்து கொண்டே சென்றால், நாளை இவர்கள் உயிருக்கே கூட ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது, என்று கவலை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
எனவே, மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும், கொலை மிரட்டல் விடும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை வலுத்துள்ளது.