மத்திய பட்ஜெட்: வரவேற்பு பாதி, ஏமாற்றம் பாதி - 'TANSTIA', 'COTMA' தொழில் அமைப்புகள் தகவல்..!

வங்கி கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்தல் உள்ளிட்டவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால் குறுந்தொழில் முனைவோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


கோவை: மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் பாதி வரவேற்கத்தக்கதாகவும், பாதி ஏமாற்றம் அளிப்பதாகவும், 'TANSTIA', 'COTMA' தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு குறு, சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பான(TANSTIA) துணைத்தலைவர், எஸ். சுருளிவேல் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட் சில வகைகளில் வரவேற்கத்தக்கதாகவும் சில வகைகளில் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது.

வரவேற்கத்தக்க அம்சங்கள்:-

1. 400 புதிய வந்தே பாரத் ரயில்கள்

2. 100 சரக்கு முனையங்கள்

3. 25,000 கிமீ நெடுஞ்சாலை விரிவாக்கம்

4. உள்ளூர் வணிக மேம்பாட்டிற்கு ஒரு ரெயில் நிலையம் ஒரு உற்பத்தி பொருள் திட்டம்

5. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல்

6. நதிகள் இணைப்பு திட்டம்

7. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சீரமைப்பு

8. மின் வாகனங்கள் உற்பத்தி ஊக்குவிப்பு

9. குறு சிறு நிறுவனங்கள் துறைக்கு 2 லட்சம் கோடி ஒதுக்கீடு.

10. 68% ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டில் உற்பத்தி.

11. ECLGS கடன் திட்டம் மூலம் மேலும் 50,000 கோடி கடன் வழங்க ஒதுக்கீடு.

12. அரசு நிறுவனங்கள் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு 7 நாட்களுக்குள் முழுத் தொகையை முழுமையாக கொடுக்க வேண்டும்.

ஏமாற்றம் அளிப்பவை:-

1. ஜிஎஸ்டி 5% ஜாப் ஒர்க் செய்யும் நிறுவனங்களுக்கு குறைக்கப்படவில்லை

2. 90 நாட்களுக்குள் கடன் கட்டப்படவில்லை எனில் NPA என்பதனை 180 நாட்கள் என்று கேட்டிருந்தோம், அது கொடுக்கப்படவில்லை.

3. குறுந்தொழில்களுக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்க பல ஆண்டுகளாக கேட்டும் அதனை செயல்படுத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில்முனைவோர் சங்கம்(COTMA) தலைவர், சிவக்குமார் கூறியதாவது:-

தொழில்முனைவோருக்கு ECLGS திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடன் 50,000 கோடி அதிகரிக்கப்பட்டு 5 லட்சம் கோடியாக வரும் மார்ச் 2023க்குள் வழங்கப்படும்.

CGTMSE திட்டத்தில் 2 லட்சம் கோடி தொழிற் கடன் வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துதல், வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு, தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரித்தல், வங்கி கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்தல் என்பது உள்ளிட்டவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால் குறுந்தொழில் முனைவோர் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...