திருப்பூர் கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ள சூழ்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளன.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இதனையடுத்து, திருப்பூர் கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, நான்கு சக்கர வாகனத்தில் நல்லகணபதி என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்திருந்த 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.