கோவை மாநகராட்சி ஆணையருக்கு இராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மீண்டும் மனு..!

எங்களது நோக்கம் மக்கள் தேவைக்கு உள்ள நீர்நிலைத் தொட்டியை தடுப்பது அல்ல, சரியான இடத்தில் அமைத்து மக்களும் மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதே என்றனர்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு இராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மீண்டும் மனு அளித்துள்ளனர்.

கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொண்டு வரும் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு மாற்று இடம் அமைத்துத்தர கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக கோவை மாநகராட்சி துணை ஆணையர் கடந்த 21ம் தேதி உறுதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மீண்டும் கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு இராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளியில் மேற்கொண்டு வரும் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு மாற்று இடம் அமைத்துத்தர மனு அளித்துள்ளனர்.

கோவை இராமநாதபுரம் அரசுப்பள்ளி மைதானத்தில் மேல்நிலைத்தொட்டி அமைக்க பணி துவங்கியதை அடுத்து தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்த்து வரும் நிலையில் அரசியல் கட்சியினை சார்ந்த பலரும், இந்தியா மாணவர் சங்கம் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஞாயிறு அன்று போராட்டங்கள் நடத்திய எட்டு மாணவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் சட்ட விரோதமாக ஒன்றுகூடுதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.



இந்நிலையில், வழக்கு பதிவு செய்த மாணவர்களில் 5 நபர்கள் இன்று நடைபெற்று வரும் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு மாற்று இடம் அமைத்துத்தர மனு அளித்தனர்.

கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த நிலையில் அன்று 2000 மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது சுமார் 493 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பணிகளை மேற்கொள்ளும்போது அந்தப் பள்ளியில் இருந்த பல்வேறு மரங்களை வேரோடு வெட்டி சாய்த்து உள்ளார்கள். தொட்டி அமைப்பதன் மூலம் பள்ளி மைதானம் பெரிய அளவில் பாதிப்பு அடைகிறது. இதனால் மாணவர்களின் விளையாட்டு திறமைகள் பாதிப்புக்குள்ளாகிறது.

எனவே, பள்ளி மைதானத்தில் அமையவிருக்கும் மாநகராட்சி தண்ணீர் தொட்டியை வேறு இடத்தில் மாற்றி அமைத்து பள்ளி மைதானத்தை பாதுகாக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இது போன்று விளையாட்டு மைதானத்துடன் பள்ளி எங்கும் அமையவில்லை என்ற நிலை இருக்கும் நிலையில் இந்த பள்ளியில் அமையப்பெற்ற விளையாட்டு மைதானத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் நீர்தேக்க தொட்டியை மாற்றி அமைத்திடவேண்டும் என்று கூறினர்.

எங்களது நோக்கம் மக்கள் தேவைக்கு உள்ள நீர்நிலைத் தொட்டியை தடுப்பது அல்ல, சரியான இடத்தில் அமைத்து மக்களும் மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதே என்றனர். மேலும், அவர்கள் குறிப்பிட்டது, எங்கள் பகுதியில் நீர்தேக்க தொட்டி அமைக்க இடம் இருந்தும் பள்ளியில் அமைப்பது வருத்தம் தருகின்றது என்று தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...