கோவையில் 25 அடி ஆழ கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டினை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்..! பொதுமக்கள் பாராட்டு..!!

அன்னூரை அடுத்துள்ள அல்லப்பாளையம் பகுதியில் கிணற்றில் இறங்கி மாட்டினை கயிறு கட்டி சுமார் 2 மணி நேரம் போராடி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.



கோவை: கோவை அன்னூரை அருகே 25 அடி ஆழ கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டினை சுமார் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள அல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராமகிருஷ்ணன். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் விவசாய நிலமும், மாடுகளும் உள்ளன.

இந்நிலையில், இன்று அதிகாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடு ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளது. பின்னர், சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக 10 அடி நீரில் மிதந்த வண்ணம் நீரில் தத்தளித்துள்ளது.



பின்னர், இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் ராமகிருஷ்ணனுக்கு தெரிய வரவே அன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி மாட்டினை கயிறு கட்டி சுமார் 2 மணி நேரம் போராடி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.



சுமார் 25 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாட்டினை 2 மணி நேரமாக போராடி பத்திரமாக உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...