கோவையில் 4,300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்; ஒருவரை கைது செய்த உணவு வழங்கல் துறை அதிகாரிகள்

கோவையில் இன்று இரு வேறு சம்பவங்களில், ரேசன் அரிசியை மொத்தமாக பெற்று வடமாநில தொழிலாளிகளுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 4,300 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.


கோவை: கோவையில் இன்று இரு வேறு சம்பவங்களில், ரேசன் அரிசியை மொத்தமாக பெற்று வடமாநில தொழிலாளிகளுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக, 4,300 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யபட்டு நிலையில், மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தண்ணீர் பந்தல் ரோட்டில் மாவட்ட வழங்கல் அதிகாரி மேனகா மற்றும் போலீசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விசாரணையில் கண்ணன் என்பவர் பொது விநியோகத் திட்ட அரசியை விளாங்குறிச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அதையடுத்து, அதே பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 3,700 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர். ரேசன் அரிசியை பதுக்கிய நபரான கண்ணனை தேடி வருகின்றனர்.

இதேபோல, மற்றொரு சம்பவத்தில் கோவை காந்திபுரம், டாடாபாத் பகுதியில் மாவட்ட வழங்கல் அதிகாரி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பொதுவிநியோகத் திட்ட ரேஷன் அரிசியை காந்திபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களிடம் இருந்து குறைந்த வாங்கி வடமாநிலத்தில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்க தேக்கி வைத்திருந்த சுமார் 1,100 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அரிசியை பதுக்கி வைத்திருந்த சதாம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...