பொள்ளாச்சியில் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் அழிப்பு

பொள்ளாச்சியில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் அழித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் அழித்தனர்.

பொள்ளாச்சி மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீசார் கள்ளச்சந்தையில் மது விற்பனை மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரும் மது விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மதுபாட்டில்களை அழிக்க உத்தரவிட்டார்.



இதனை அடுத்து இன்று மதுவிலக்கு போலீசார் ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான 10,446 மது பாட்டில்களைப் பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள புறம்போக்கு இடத்திற்குக் கொண்டு சென்று, அதிகாரிகள் முன்னிலையில் மது பாட்டில்களை நிலத்தில் கொட்டி அழித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...