கூட்டுறவு கடன் தள்ளுபடி கட்டாப் தேதியை நீட்டிக்க விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம்

தமிழகத்தில் பயிர் கடன் தள்ளுபடி காண கட்டாப் தேதியை நீட்டிக்க கோரி, இன்று ஆனைமலை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைப்பெற்றது.


கோவை: தமிழகத்தில் பயிர் கடன் தள்ளுபடி காண கட்டாப் தேதியை நீட்டிக்க கோரி, இன்று ஆனைமலை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைப்பெற்றது.

தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அண்மையில் அரசு உத்தரவு பிறப்பித்தது. இதில், கூட்டுறவு கடன் சங்கத்தில் 2021 ஜனவரி 31ம் தேதி வரையில், விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்நிலையில், அரசு அறிவித்த கட்டாப் தேதியை, 2021 மார்ச் 31 தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த, கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆனைமலை மற்றும் மாரப்பகவுண்டன்புதூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார், தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் சந்திர ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...