ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அமாவாசையை முன்னிட்டு, குவிந்த பக்தர்கள் நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அமாவாசையை முன்னிட்டு, குவிந்த பக்தர்கள் நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலிருந்தும், கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், வெள்ளிக்கிழமைகள் மற்றும் அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், வழிபாட்டுத் தலங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முக கவசம் அணிந்து, நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கோயில் நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.