கோவையில் தப்பிச்சென்ற கைதியை பிடிக்க 3-தனிப்படை அமைப்பு

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி தப்பிச் சென்றதையடுத்து, அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி தப்பிச் சென்றதையடுத்து, அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கோவை நகரில் நான்கு கோவில்களுக்கு தீ வைத்த சம்பவத்தில் சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரை காவல்துறை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் கோளாறு காரணமாகக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறைக் கைதி தப்பிச் சென்றது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தப்பிச்சென்ற கஜேந்திரனைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது தனிப்படை போலீசார் கோவை சேலம் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் இன்று எப்படியும் கஜேந்திரன் சிக்கி விடுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...