பொள்ளாச்சி சாலையில் உருவான ராட்சத பள்ளம்

பொள்ளாச்சி மீன்கரை சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு திடீரென 5 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி மீன்கரை சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

பொள்ளாச்சி மீன்கரை தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.



இந்நிலையில் வழக்கம்போல் இன்றும் வாகன போக்குவரத்து இயங்கிக் கொண்டிருந்த போது பொள்ளாச்சி மீன்கரை சாலையில் உள்ள கண்ணப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை நடுவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு திடீரென 5 அடி பள்ளம் ஏற்பட்டது.

இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து மாற்றுப்பாதையில் சென்றனர். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பராம்பாளையம் ஆற்றுப்படுகையிலிருந்து நகராட்சிக்குக் குடிநீர் கொண்டு செல்வதற்காகச் சாலையைத் தோண்டி பொருத்தப்பட்டிருந்த பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.



காலை நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல முடிந்தது. இரவு நேரம் ஏற்பட்டிருந்தால் 5 அடி பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும்.

தரமற்ற சாலைகள் அமைப்பதால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாகவும் விபரீதம் ஏற்பட்டால் மட்டும்தான் அதிகாரிகளின் விழித்துக்கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள், இது போன்ற சாலைகளை வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...