நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள்: கோவையில் டிஜிபி ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி செய்யப்படவேண்டிய போலீஸ் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவை வந்தார்.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி செய்யப்படவேண்டிய போலீஸ் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்யத் தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவை வந்தார்.

பின்னர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் பிரச்சாரம், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை வரை மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு குறித்தும், சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்குக் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை வழங்கினார்.

இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி, மற்றும் துணை போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பட போலீஸ் உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...