கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ராட்சத தேன்கூட்டால் வியாபாரிகள் அச்சம். இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ராட்சத தேன்கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு கோவை-பொள்ளாச்சி சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பல்வேறு வகையான பறவைகள் வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள 21தூண் பகுதிகளில் ராட்சத அளவிலான தேன்கூடு ஒன்று உள்ளது.

இந்தத் தேன் கூட்டால் வியாபாரிகள் தற்போது அச்சமடைந்துள்ளனர். அடிக்கடி இந்த ராட்சத தேன் கூடு களைவதால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் மீது தேனீக்கள் கொட்டும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. எனவே, இந்த ராட்சத தேன்கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.