தேர்தல் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி தீவிரம்

தேர்தல் பறக்கும் படை வாகனங்களுக்கு விரைவில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட உள்ளதால், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.


கோவை: தேர்தல் பறக்கும் படை வாகனங்களுக்கு விரைவில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட உள்ளதால், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 நகராட்சிக்குட்பட்ட 198 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 33 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட 26-ஆம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் விதமாக மண்டலம் பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் ஒரு உதவி செயற்பொறியாளர் 2 போலீசார் ஒளிப்பதிவாளர் உட்பட 4 பேர் என 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் விதிமீறல் கண்காணிக்கக் கோவை மாவட்டத்தில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படைகள் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி கூறுகையில், கோவை மாவட்டத்தில் 72 பறக்கும் படையினர் உள்ளனர். இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பறக்கும் படை வாகனங்களுக்கு விரைவில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட உள்ளது அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...