ஏழை எளிய மக்களுக்கு திமுக விரோத ஆட்சியாக செயல்படுவதால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றி பெறும் - பொள்ளாச்சி ஜெயராமன்

நகர மக்கள் முதல் கிராம மக்கள் அனைவரும் வெகுண்டெழுந்து உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்வார்கள் என தெரிவித்தார்.


கோவை: ஏழை எளிய மக்களுக்கு திமுக விரோத ஆட்சியாக செயல்படுவதால், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புரவிபாளையம், போடிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு இடம் அளவீடு செய்து தரப்படவில்லை.



எனவே, உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட மக்களுக்கு நில அளவீடு செய்ய வேண்டும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்ரே -சுபம்- ஞானதேவ் - ராவிடம் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு ஜெயராமன் அளித்த பேட்டியின்போது, அதிமுக ஆட்சியில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு, பல மாதங்களாகியும் இதுவரை நில அளவீடு செய்து தரப்படவில்லை. உடனடியாக நில அளவீடு செய்து தர வேண்டும்.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பொங்கல் பரிசாக ஒரு முறை ஆயிரம் ரூபாயும் கடந்த ஆண்டு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய், தரமான பரிசு தொகுப்பு பொருட்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், திமுக ஆட்சியில் இது எதுவும் நடைபெறவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளித்து உள்ளனர். இதுவரை இலவச வேஷ்டி சேலை வழங்கப்படவில்லை. இந்த ஆட்சி ஏழை எளிய மக்களுக்கு விரோத ஆட்சி. இதனால் நகர மக்கள் முதல் கிராம மக்கள் அனைவரும் வெகுண்டெழுந்து உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்வார்கள் என தெரிவித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...