திருப்பூரில் ஆசைக்கு இணங்க வலியுறுத்தி மிரட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சி..!

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு, திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் ஆசைக்கு இணங்க வலியுறுத்தி மிரட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா. கணவரைப் பிரிந்து விவாகரத்தானவர். தற்போது இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பாரத் முன்னணியில் பொதுச்செயலாளராக இருப்பதாக பழனி குமார் என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். சில நாட்களில் அவரின் சுயரூபம் தெரிந்து, அவரை விட்டு விலகிய நிலையில் பழனிகுமார் தொடர்ந்து தன்னை மிரட்டி ஆசைக்கு இணங்க வலியுறுத்தி, சுதாவை மிரட்டி வருவதாகவும் இதனை மறுத்ததால் அவரை முகநூலில் அவதூறாக விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.



இதனால் மனமுடைந்த சுதா இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்குத்தானே மண்ணை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.



இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணைக்கு திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சுதா மற்றும் பழனி குமாரிடம் திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...