மேலும், விவசாய நகைக் கடன் என்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட நில ஆவணங்களும் போலியானவை என தெரியவந்துள்ளது.
கோவை: கோவையில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 1.32 கோடி ரூபாய் மோசடி செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இந்தியன் வங்கி, கோவை சேரன் மாநகர் கிளையில் போலி நகையை அடகு வைத்திருப்பதாக, வங்கி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டன.
இதில், கேரளா, எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரெஜி (47), காந்தி மாநகரை சேர்ந்த ஹேமாமாலினி, காளப்பட்டி மதன்குமார் ஆகியோர் அடகு வைத்த நகைகள் போலியானவை என்று கண்டறியப்பட்டன.
இவர்கள் மூவரும் சேர்ந்து மொத்தமாக, 4.07 கிலோ நகைகளை அடகு வைத்து, 1 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
இந்த நகைகளை ஆய்வு செய்து உண்மையானவை தான் என்று நகை மதிப்பீட்டாளர்கள் தர்மலிங்கம், செல்வராஜ் சான்றளித்துள்ளனர். இது குறித்து வங்கி மண்டல மேலாளர் சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் விசாரித்த போலீசார், கேரளாவில் ரெஜியை கைது செய்துள்ளனர். ஹேமாமாலினி, மதன்குமார், மதிப்பீட்டாளர்கள் தர்மலிங்கம், செல்வராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
மேலும், விவசாய நகைக் கடன் என்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட நில ஆவணங்களும் போலியானவை என தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.