கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ விபத்து; மூச்சுத் திணறலில் அவதிப்படும் மக்கள்..!

தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனமீட்டர் குப்பை தரம் பிரித்து அழிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரிக்கும் பொழுது இங்கு அவ்வப்போது தீ விபத்து தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.

குப்பைகள் ஒரே பகுதியில் சேகரிக்கப்படுவதால் தீ மளமளவென பரவி, கரும் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தானாகத் தீப்பிடிக்கிறதா? அல்லது இங்குள்ள ஊழியர்கள் குப்பை அளவை குறைக்க வேண்டுமென்றே தீ பற்ற வைக்கின்றனரா? என்று சந்தேகம் எழுப்பி, குப்பைக்கிடங்கு செயல்பட கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழலில், குப்பையை அகற்ற ரூ.60 கோடி செலவில் பயோ-மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனமீட்டர் குப்பை தரம் பிரித்து அழிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை.

இதனிடையே, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு 10 மணியளவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. கடும் புகை மூட்டம் எழுந்ததால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

தீ விபத்து குறித்து அப்பகுதியின் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, துணை தீயணைப்பு அலுவலர் அழகர் சாமி தலைமையில் பீளமேடு, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களிலிருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனமும், 25 தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்றனர்.

ஆனால், குறித்த நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தீயணைப்பு வாகனங்கள் செல்லாததால் தீயை அணைப்பதில் தொய்வு ஏற்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...