கோவை பேரூரில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்

கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றும் படி கோவில் நிர்வாகத்தினர், போலீசார் அறிவுறுத்தி இருந்தாலும் மக்கள் குவிந்த வண்ணமே உள்ளனர்.



கோவை: கோவையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பேரூர் கோவிலில் திரண்ட மக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அமாவாசைகளில் மிக முக்கியமான அமாவாசையாக தை மாதம் வரும் அமாவாசை திகழ்கிறது. இந்நாளில் பொதுமக்கள் பலரும் முன்னோர்கள் மற்றும் உறவினர்கள் இறப்பிற்கு தர்ப்பணம் செய்வது, திதி கொடுப்பது வழக்கம். 

அதன்படி, தை அமாவாசை நாளான இன்று கோவையில் பிரசித்தி பெற்ற கோவிலான பேரூர் பட்டீசுவரர் கோவில் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் அதிகாலையில் இருந்தே குவிந்து வருகின்றனர். 



கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றும் படி கோவில் நிர்வாகத்தினர், போலீசார் அறிவுறுத்தி இருந்தாலும் மக்கள் குவிந்த வண்ணமே உள்ளனர். இதனால் கோவிட் தொற்று பரவும் அபாயம் ஏற்படலாம் என எண்ணப்படுகிறது.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...