கோவையில் சூயஸ் தண்ணீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு..!

மாணவர்கள் மீது நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடுகளையும் மீறி கூடியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் சூயஸ் தண்ணீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சூயஸ் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அங்கு கூடிய பள்ளி மாணவர்கள், சூயஸ் திட்டத்தில் பள்ளி மைதானத்தில் நடந்து வரும் சூயஸ் தொட்டி பணிகளை நிறுத்த கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இந்நிலையில், பள்ளி வளாகத்தில் சூயஸ் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த 8 மாணவர்கள் மீது நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடுகளையும் மீறி கூடியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...