மேட்டுப்பாளையத்தில் தன்னார்வலர்கள் மூலம் சுவர்களை வண்ண ஓவியங்களால் அலங்கரித்து வரும் அரசுப் பள்ளி

காரமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறைகள், வெளிப்புற சுவர்கள், சுற்றுச்சுவர் முழுவதும் கோவையைச் சேர்ந்த தூரிகைத்துளிகள் என்ற தன்னார்வ அமைப்பினர் வண்ண, வண்ண ஓவியங்களைத் தீட்டி அழகுபடுத்தியுள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் தன்னார்வலர்கள் மூலம் சுவர்களை வண்ண ஓவியங்களால் அலங்கரித்து அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள குட்டையூரில் காரமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் வகுப்பறைகள், வெளிப்புற சுவர்கள், சுற்றுச்சுவர் முழுவதும் கோவையைச் சேர்ந்த தூரிகைத்துளிகள் என்ற தன்னார்வ அமைப்பினர் வண்ண, வண்ண ஓவியங்களைத் தீட்டி அழகுபடுத்தியுள்ளனர்.



வகுப்பறைகளின் உள்ளே பாடம் குறித்த ஓவியங்களும், வெளிப்புறச்சுவர் மற்றும் சுற்றுச் சுவர்களில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, மரம் நடுதல், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.



இதற்காக எவ்விதக் கட்டணமும் பெறுவதில்லை என்று கூறும் தன்னார்வலர்கள் விருப்பமுள்ள அரசு பள்ளிகள் தங்களை அணுகினால் இலவசமாக ஓவியங்கள் வரைந்து கொடுக்க தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர்.



இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியை வடிவாம்பாள் கூறுகையில், தங்கள் பள்ளியில் முழுமையான ஆங்கிலவழிக் கல்வி, ஸ்மார்ட் வகுப்பறைகள், மற்றும் மாணவர்களுக்குச்சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி தூய்மையான கழிப்பறைகள் உட்பட அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகரித்துள்ளதாகவும், தற்பொழுது தங்கள் பள்ளியில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் மாணவர்களிடம் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டுவதுடன் வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

வரும் பிப்ரவரி 1 முதல் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஓவியங்கள் மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...