அன்னூர் பைனான்சியர் கொலை வழக்கு: இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4-பேர் கைது

அன்னூரில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4- பேர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: அன்னூரில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4-பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாகம்மாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவண சுந்தரம். இவர், இந்து முன்னணி நிர்வாகியாகியான குட்டி என்கிற ராஜேந்திரன் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

அண்மையில், அவரிடம் இருந்து பிரிந்து சென்று சரவண சுந்தரம் தனியாக நிதி நிறுவனம் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இதையடுத்து, தமிழ்செல்வன் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நிதி நிறுவனத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

பணம் பெற்றுக் கொண்டு தமிழ்செல்வன் பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பு செய்ததால் சரவண சுந்தரத்திற்கும் தமிழ்செல்வனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த (ஜன.27) வியாழக்கிழமை தமிழ்செல்வன், தனது நண்பர் ராஜராஜனுடன் சேர்ந்து சரவண சுந்தரத்தை வெட்டி கொலை செய்து, இருவரும் அன்னூர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

அதன்பின் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்விவகாரத்தில் திருப்பமாக, இந்த கொலையை இந்து முன்னணி நிர்வாகி குட்டி என்கிற ராஜேந்திரன் தான் திட்டமிட்டு அரங்கேற்றியதாக உயிரிழந்த சரவண சுந்தரத்தின் உறவினர்கள் அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, விசாரணை நடத்திய காவல்துறையினர், ராஜேந்திரன் மற்றும் ரங்கநாதன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அன்னூர் பகுதியில் தலைமறைவாகி இருந்த இருவரையும் காவல்துறையினர் (ஜன.28) கைது செய்தனர். இருவர் மீதும் கொலை வழக்கு, கூட்டுச்சதி செய்தல் என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...