சூயஸ் தொட்டி கட்ட எதிர்ப்பு: ராமநாதபுரம் அரசு பள்ளியில் மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் அரசு பள்ளியில் சூயஸ் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: ராமநாதபுரம் அரசு பள்ளியில் சூயஸ் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் சூயஸ்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகக் கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ளவிளையாட்டு மைதானத்தில் குடிநீர்த் தொட்டி அமைப்பதற்காகப்பள்ளம் தோண்டப்பட்டு தொட்டிக் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.



இதற்கு பல்வேறு அமைப்புகள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அங்குக் கூடிய பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சூயஸ் திட்டத்தில் பள்ளி மைதானத்தில் நடந்து வரும் சூயஸ் தொட்டி பணிகளை நிறுத்த வேண்டும் என கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.



இதற்கிடையே, மாணவர்கள் சிலர் பள்ளியில் உள்ள மரத்தின் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து அங்கு சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் பள்ளியைப் பார்வையிட்டார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்டிருந்த மாணவர்கள் இப்பிரச்சனை குறித்துக் கூறுகையில், இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் தான் பேசும்படி கூறினார். இதனையடுத்து, காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...