கோவையில் திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சிக்கு சீட் வழங்குவதா..? அமைச்சர் செந்தில் பாலாஜி கார் முற்றுகை.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 18 மற்றும் 54 வது வார்டுகளில், கவுன்சிலர் வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாகவும், திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்கியதை கண்டித்து திமுகவினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.



கோவை: கோவையில் திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சிக்கு சீட் வழங்கியதை கண்டித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி வாகனத்தை முற்றுகையிட்ட திமுகவினரால் பரபரப்பு.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 18 மற்றும் 54 வது வார்டுகளில் வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாகவும், திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்கியதை கண்டித்து திமுகவினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.



கோவை அவிநாசி சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை துவக்கி வைக்க தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவை வந்திருந்தார்.நிகழ்ச்சி முடிந்து அவர் திரும்பும் போது, திமுகவினர் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் இருக்கும் மூன்று வாயில்களிலும் திமுகவினர் சூழ்ந்துகொண்டு அமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட காத்திருந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், வார்டு 54 இல் திமுக கட்சியினருக்கு கவுன்சிலர் சீட்டு வழங்காமல், கூட்டணி கட்சிக்கு சீட்டு வழங்கியதை கண்டிப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து, காரில் இருந்த அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, பதில் ஏதும் சொல்லாமல் அமைச்சர்சட்டென்று புறப்பட்டுச் சென்றார், என்று தெரிவித்தனர்.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை, திமுகவினரே முற்றுகையிட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...