கோவைப்புதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் குத்துவிளக்கு திருட்டு; போலீசார் விசாரணை

கோவைப்புதூரில் உள்ள ஐயப்பன் கோயிலிலிருந்த சுமார் 75-கிலோ எடையிலான ரூ.45- ஆயிரம் மதிப்புடைய பித்தளை குத்துவிளக்கைத் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவையில் ஐயப்பன் கோயிலில் ரூ. 45 ஆயிரம் மதிப்பிலான குத்துவிளக்கைத் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவைப்புதூரில் உள்ள கல்லூரி ஜங்சன் அருகே ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், கோயில் பூசாரி வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவிலைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், நேற்று காலை கோயிலைத் திறக்க வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடந்துள்ளது.

பின்னர், கோவிலுக்குள் சென்று பார்த்த போது, கோயிலிலிருந்த சுமார் 75 கிலோ எடையிலான ரூ.45 ஆயிரம் மதிப்புடைய பித்தளை குத்து விளக்கு திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே,இது குறித்து கோயில் நிர்வாக அறங்காவலர் பிரபாகரனுக்கு அவர்தகவல் கொடுத்துள்ளார்.

இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குத்துவிளக்கைத் திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...