கோவை லட்சுமி விலாஸ் வங்கி நகை மோசடி வழக்கு: ரூ.32 லட்சம் மோசடி செய்த மதிப்பீட்டாளர் கைது; குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

வாடிக்கையாளர்களிடம், போலி நகைகளை கொடுத்து அடமானம் வைத்து கடன் பெற்று வந்துள்ளார். புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் ஜெயசங்கரை இன்று கைது செய்தனர்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக பணியாற்றி வந்த நபர் போலி நகைகளை வாடிக்கையாளர்கள் மூலம் மோசடி செய்து, ரூ.32 லட்சம் வரை கையாடல் செய்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட நகை மதிபீட்டாளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

காந்திபுரம் லட்சுமி விலாஸ் வங்கி தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் நபரான ஜெயசங்கர் வேலை செய்து வந்தார். இவர், வங்கியின் வாடிக்கையாளர்களிடம், தன் வங்கியில் வேலை செய்வதால், தன் குடும்பாத்தாரின் நகையை தானே அடகு வைக்க முடியாது என்று தெரிவித்து, நகைகளை தனக்கு அடமான வைக்க உதவுமாறு கேட்டுக் வந்துள்ளார்.

இந்த நிலையில், இவருக்கு உதவ முன்வந்த வாடிக்கையாளர்களிடம், போலி நகைகளை கொடுத்து அடமானம் வைத்து கடன் பெற்றுவந்துள்ளார். இவர் செய்து வந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்த நிலையில், வங்கி சார்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் ஜெய சங்கரை இன்று கைது செய்தனர்.

போலி நகைகளை அடமானம் வைத்து, தங்கநகை மதிப்பீட்டாளரே மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...