கோவையில் உதவி ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தேர்தல் அதிகாரிகள் மாற்றம்..!

மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர் மற்றும் கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி ஆகியோருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவையில் உதவி ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் தேர்தல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் தலா 5 வார்டுகளுக்கு ஒருவர் வீதம் 20 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடியாததால், வார்டு ஒதுக்கீடு இறுதியாக போட்டியிட விரும்புவோர் மட்டும் விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ளனர். நேற்று ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர் மற்றும் கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி ஆகியோருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு, தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மண்டல உதவி ஆணையர் சங்கர் ஒதுக்கப்பட்டிருந்த 62, 63, 64, 65, 84, ஆகிய வார்டுகளுக்கு காண உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக உதவி ஆணையர் கணக்கு சுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி ஒதுக்கியிருந்த 7, 22, 24, 54, 59 ஆகிய வார்டுகளுக்கு உதவி நகரமைப்பு அலுவலர் விமலாவை நியமித்து மாநகராட்சி ஆணையர் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...