கோவையில் குடியிருப்பு பகுதியில் 2 காவலர்கள் மோதல் - போலீசார் விசாரணை..!

இரண்டு காவலர்களும் மோதிக்கொண்டு விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் 2 காவலர்கள் மோதி கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் பட்டாலியனில் பணியாற்றும் போலீஸ்காரர்கான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ராமச்சந்திரன் (32), முருகானந்தம் (30) ஆகியோர் எதிரெதிர் வீடுகளில் வசித்து வருகின்றனர். ராமச்சந்திரன் கோவை நாலாவது பட்டியலில் பணியாற்றுகிறார். முருகானந்தம் டெல்லியில் எட்டாம் பட்டாலியன் இல் வேலை பார்க்கிறார்.

இந்நிலையில், நேற்று ராமச்சந்திரனுக்கும் முருகானந்த்திற்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் அங்கு கிடந்த கிரிக்கெட் மட்டையால் ராமசுந்தரம் சரமாரியாக தாக்கினார். காயமடைந்த அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ராமச்சந்திரன் குனியமுத்தூரில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் முருகானந்தம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல், முருகானந்தத்தின் மனைவி தனது கணவருடன் ராமச்சந்திரன் தகராறில் ஈடுபட்டதாகவும் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றொரு புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்தனர்.

இரண்டு காவலர்களும் மோதிக்கொண்டு விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் எந்த பிரச்சினைக்காக மோதிக் கொண்டார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...