கோவையில் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

திருப்பூர் சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார், தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு பயத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை.


கோவை: கோவை மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார், விவசாயி. இவரது மகன் கார்த்திக் குமார் வயது 21, கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கி தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கார்த்திக் குமார் நண்பர்களிடம் இரண்டாம் ஆண்டு பாட புத்தகம் படிப்பதற்கு சிரமமாக உள்ளது என கூறி வந்ததாக கூறப்படுகிறது. நண்பர்கள் அவரை தேற்றி சமாதானம் செய்து வந்த போதிலும், கார்த்திக் குமார் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் அவரது செல்போனுக்கு அழைத்து பார்த்தனர். பின்னர், வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கார்த்திக் குமார் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...