நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்‌: கோவை மாநகராட்சியில்‌ மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு..!

பயிற்சிக்கு வரும்‌ அலுவலர்கள்‌ பயிற்சி நடைபெறும்‌ அறைகளை அறிந்து கொள்வதற்கு வசதியாக பயிற்சி மையங்களில்‌ அறிவிப்பு பலகைகள்‌ அமைக்க அறிவுறுத்தல்.


கோவை: கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி கலையரங்கத்தில்‌, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தோ்தல்‌ 2022 பணியில்‌ ஈடுபடும்‌ மண்டல அலுவலர்கள்‌, உதவி மண்டல அலுவலர்கள்‌ ஆகியோருக்கான பயிற்சி வகுப்பு மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தலைமையில்‌ இன்று (29.01.2022) நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது,



“கோவை மாநகராட்சியில்‌ நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ 19.2.2022 அன்று 100 வார்டுகளுக்கும் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில்‌ நடைபெறும்‌ நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ பணிக்கு 5 வார்டுகளுக்கு ஒருவர்‌ வீதம்‌ மொத்தம்‌ 20 உதவி தோ்தல்‌ நடத்தும்‌ அலுவலா்கள்‌ நியமனம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட 1290 வாக்குச்சாவடிகளில்‌ பணியாற்ற உள்ள 1290 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும்‌, 3870 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும்‌ காத்திருப்பில்‌ உள்ள (RESERVE) 258 வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள்‌ மற்றும்‌ 774 வாக்குப்பதிவு அலுவலர்கள்‌ ஆகமொத்தம்‌ 6192 அலுவலர்களுக்கு 95 மண்டல அலுவலா்கள்‌ மூலம்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட உள்ளது.

இந்த தேர்தல்‌ பணியில்‌ மொத்தம்‌ 95 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில்‌ ஒரு மண்டல அலுவலர்கள்‌, உதவி மண்டல அலுவலர்கள்‌ மற்றும்‌ உதவியாளர்‌ என 3 நபர்கள்‌ 95x3=285 ஈடுபடுவார்கள்‌. மேலும்‌, கூடுதலாக 10 குழுக்கள்‌ Reserve செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம்‌ மண்டல அளவிலான குழுவில்‌ 315 நபர்கள்‌ பணியில்‌ ஈடுபடுவார்கள்‌.

இன்று பயிற்சி பெற்ற மண்டல அலுவலர்களால்‌ வரும்‌ 31.01.2022 அன்று முதற்கட்டமாக பயிற்சி வகுப்புகள்‌ வடக்கு மண்டலத்திற்கு பீளமேடு, பி.எஸ்‌.ஜி தொழில்நுட்ப கல்லூரியிலும்‌, கிழக்கு மண்டலத்திற்கு இராமநாதபுரம்‌, மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப் பள்ளியிலும்‌, மேற்கு மண்டலத்திற்கு ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியிலும்‌, தெற்கு மண்டலத்திற்கு குனியமுத்தூர்‌ RKV மேல்நிலைப்பள்ளியிலும்‌, மத்திய மண்டலத்திற்கு சுங்கம்‌, ரெட்பீல்டூ, நிர்மலா மகளிர்‌ கல்லூரியிலும்‌ நடைபெறுகிறது. இதில்‌ தேர்தல்‌ அலுவலா்களுக்கு தேர்தல்‌ பணியினை எவ்வாறு மேற்கொள்வது, படிவங்கள்‌ பூர்த்தி செய்வது மற்றும்‌ Control Unit, Ballot Unit எவ்வாறு பயன்படுத்துவது, அதன்‌ செயல்பாடுகள்‌ குறித்து பயிற்சியளிப்பார்கள்‌. இந்த தோ்தலில் வி.வி.பாட்‌ (VV.PAT) மற்றும்‌ நோட்டா (NOTA) ஆகியவை இடம்‌ பெறபோவதில்லை.

மேலும்‌, மண்டல அலுவலர்கள்‌ தோ்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ தேர்தல்‌ அலுவலா்கள்‌ சந்தேகங்களை கேட்டறிந்து உரிய விளக்கத்தை பயிற்சியின்போது அளிக்க வேண்டும்‌. தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ அலுவலர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கிட வேண்டும்‌. நடைபெறவுள்ள தோ்‌தல்‌ நேர்மையாகவும்‌, வெளிப்படையாக நடத்திட முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்‌.

மேலும்‌, பயிற்சிக்கு வரும்‌ அலுவலா்கள்‌ பயிற்சி நடைபெறும்‌ அறைகளை அறிந்து கொள்வதற்கு வசதியாக பயிற்சி மையங்களில்‌ அறிவிப்பு பலகைகள்‌ அமைக்க வேண்டும்‌. பயிற்சியில்‌ கலந்து கொள்ளும்‌ அலுவலர்கள்‌ தபால்‌ ஓட்டு போடுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு அதற்கான படிவம்‌-15ஜ பயிற்சி வகுப்புகளில்‌ வழங்குவதற்கும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி மையங்களில்‌ கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது. P1 மற்றும்‌ P3 பயிற்சியில்‌ பங்கேற்கவுள்ள நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது கைபேசிக்கு SMS மூலமாக தகவல்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.” என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்‌.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிலா அவர்கள்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌, மண்டல தோ்தல்‌ அலுவலா்கள்‌, மண்டல உதவி தோதல்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...