சூடுபிடித்தது கோவை தேர்தல் களம்..! அரசியல் கட்சிகளின் கொடிகள், போஸ்டர், நோட்டீஸ் தயாரிப்பு பணி மும்முரம்

கொரோனா காரணமாக, அரசியல் கொடிகள் விற்பனை கடந்த இரு வருடமாக மந்தமாகவே இருந்து வந்தாகவும், தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது என்று கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் துவங்கியுள்ள நிலையில், கோவையில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற முக்கிய கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி வருகின்றன. இன்று இரவு அல்லது நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து கோவையில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிப்பு மற்றும் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. கோவை கடைவீதி பகுதிகளான, டவுன்ஹால், பெரியகடை வீதி, காந்திபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் பல அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கொரோனா காரணமாக, அரசியல் கொடிகள் விற்பனை கடந்த இரு வருடமாக மந்தமாகவே இருந்து வந்தாகவும், தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும், சுயேட்சை சின்னங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதால், பல்வேறு சுயேட்சை சின்னங்களுடன் கூடிய கொடிகளும் தயாரிக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கும் என்று கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கூட்டணி உறுதியானவுடன், அந்தந்த கட்சி சின்னங்களை இணைத்தும் கொடிகள் தயாரிக்க இருப்பதாகவும், கொடி தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.



நூற்றுக்கணக்கான கடைகளில் கட்சிக் கொடிகள் தயாரிப்பு பணி நடைபெற்று வருவதால், அதிக எண்ணிக்கை ஆர்டர் கொடுத்தாலும், உடனடியாக கிடைத்து விடுவதால், கோவை மட்டுமல்லாமல் அருகிலுள்ள நகரப்பகுதிகளில் இருந்தும் கட்சியினர் வந்து வாங்கி செல்வதாக அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

தேவையான அளவுகளில் துணியை தைத்து, ஸ்கீரின் பிரிண்டிங் செய்து கொடிகளை தயார் செய்து வைத்துள்ள கொடி தயாரிப்பாளர்கள் அரசியல் கட்சியினரின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்ய இருப்பதாகவும், அடுத்த சில தினங்களில் பி்ரச்சாரம் தீவிரம் அடையும் நிலையில் விற்பனையும் அதிகரிக்கும், என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...