227வது முறையாக தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல்..!

வீரக்கல் புதூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.


சேலம்: 227வது முறையாக தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல் செய்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பத்மராஜன் (62). இவர் கடந்த 1986ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு, அதன்பின்னர் நடைபெற்ற பல தேர்தல்களில் அடுத்தடுத்து போட்டியிட்டு ‘தேர்தல் மன்னன்’ என்ற பட்டத்துடன் உள்ளூரில் பிரபலமானார்.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ தொகுதியிலும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவை எதிர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியால் தொகுதியிலும் சுயேட்சையாக போட்டியிட்டு அகில இந்திய அளவில் இவர் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள இவர் 1988 முதல் உள்ளாட்சித் தேர்தல், எம்எல்ஏ, எம்பி, குடியரசுத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதுவரை இவர் 226 தடவை பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கின்னஸ் மற்றும் லிம்கா புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர், பதவிக்கு வேட்பு மனு தாக்கல் துவங்கியதை அடுத்து வீரக்கல் புதூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதையும் சேர்த்து அவர் 227வது முறையாக தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...