கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 72 பறக்கும் படைகள் தீவிர வாகன தனிக்கை..!

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படைகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 7 நகராட்சிகளுக்குட்பட்ட 198 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 33 பேரூராட்சிகளுக்குட்பட்ட 513 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள உள்ளது.

இத்தேர்தலில் கோவை மாநகராட்சிக்கு 1290 வாக்குச்சாவடிகள், 7 நகராட்சிகளுக்கு 390 வாக்குச்சாவடிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு 632 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2312 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்த தேர்தலில் 41 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 110 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் வீதம் சுமார் 10172 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தலை அமைதியாகவும். சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடைபெற எல்லாவிதத்திலும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.



இதனிடையே தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க, மாவட்டத்தில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.



இந்த பறக்கும் படைகள் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...