வால்பாறை அருகே கைவிடப்பட்ட பள்ளி சத்துணவு மையத்தில் குட்டி யானையின் அழுகிய உடல் கண்டெடுப்பு - வனத்துறையினர் ஆய்வு செய்து எரித்தனர்..!

நகராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு பள்ளியில் ஆய்வு செய்த போது, பூட்டிய நிலையில் இருந்த சத்துணவு மையத்தில் குட்டி யானையின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது.


கோவை: வால்பாறை அருகே கைவிடப்பட்ட பள்ளி சத்துணவு மையத்தில் மக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட குட்டி யானையின் உடலை வனத்துறையினர் ஆய்வு செய்து எரித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று முதல் நகராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் நகராட்சி அலுவலகர் தேர்தல் மையத்தை பார்வையிட சென்றனர்.

அப்போது, வால்பாறை அருகே ஹஃபோரஸ்ட் எஸ்டேட் துவக்க பள்ளியில் ஆய்வு செய்த போது, பூட்டிய நிலையில் இருந்த சத்துணவு மையத்தை திறந்து பார்த்தனர். அங்கு துர்நாற்றம் வீசிய நிலையில், இறந்து பல நாட்கள் ஆன குட்டி யானையின் உடல் இருந்தது.

இதையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்து மானாம்பள்ளி வனத்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.



இந்த நிலையில், இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் கல இயக்குனர் மற்றும் வனத்துறை மருத்துவர் முன்னிலையில் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு, விசாரணை செய்தனர்.

அதில், சத்துணவு மையத்தில் யானை கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளது திரும்பி வரும் வருவதற்கு முடியாமல் கட்டிடத்திற்கு உள்ளே மாட்டிக் கொண்டால், யானை போராடி வெளியே வர முடியாமல் இறந்து உள்ளதாகவும் யானைக்கு சுமார் ஆறிலிருந்து எட்டு வயது இருக்கும் என்றும் பிறந்தது ஆண் யானை என்பதும் வனத்துறையினர் தெரிவித்தனர்.



அதனை தொடர்ந்து, யானையின் உடலை ஆய்வு செய்த வனத்துறையினர் உடலை தீ வைத்து எரித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...