கோவை மாவட்ட காவலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: மாவட்ட எஸ்.பி கொடியசைத்து துவக்கி வைத்தார்..!

மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி செல்வரத்தினமும் இந்த மாரத்தான் போட்டியில் ஓடினார். முதல் மூன்று இடங்களை பிடித்த காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்ட காவலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாநில காவல் துறை இயக்குனர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் போலீஸ் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கொரோனா விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட போலீஸ் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றது.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இந்த மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை ஈச்சனாரி பகுதியில் இருந்து மதுக்கரை வரை சுமார் பத்து கிலோமீட்டர் மாரத்தான் நடைபெற்றது.



ஆண் காவலர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண் காவலர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் என 2 பிரிவுகளாக நடைபெற்றது.



இதில் சுமார் 45 பெண் காவலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.



மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி செல்வரத்தினமும் இந்த மாரத்தான் போட்டியில் ஓடினார். முதல் மூன்று இடங்களை பிடித்த காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...