பொள்ளாச்சி அருகே குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு..!

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனைமலை முக்கோணம் பகுதியில் தஞ்சம் அடைந்து இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன், சங்கீதா ஆகியோரின் 5 மாத குழந்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி ஏழாம் தேதி மர்ம நபரால் கடத்திச் செல்லப்பட்டது.

இதையடுத்து, ஆனைமலை போலீசார் பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில் இருபத்தி ஒன்பதாம் தேதி இரவு அங்கலக்குறிச்சி பகுதியில் வைத்து குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையை கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராமர்(45) என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனால் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...