கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறை கைதி தப்பி ஓட்டம்.

நேற்று இரவு சிறை கைதிகளுக்கான  வார்டில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன் தப்பி ஓடினார். தகவலறிந்த காவல்துறையினர், நகரின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறை கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நல்லாம்பாளையம், டவுன்ஹால், ரயில்நிலையம் ஆகிய இடங்களில்4 சிறிய கோயில்கள் அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இரு பிரிவுகள் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் என 4 வழக்குகள் கஜேந்திரன் மீது பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் கஜேந்திரன் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த 27 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக,கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு சிறை கைதிகளுக்கானவார்டில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன் தப்பி ஓடினார். தகவலறிந்த காவல்துறையினர், நகரின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...