மாநகராட்சி இணையத்திலிருந்து முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் படங்கள் நீக்கம்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி இணைய தளத்திலிருந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரது புகைப்படங்கள் நீக்கப்பட்டன.


கோவை: உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி இணைய தளத்திலிருந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரது புகைப்படங்கள் நீக்கப்பட்டன.

தமிழகத்தில் பிப்., 19-ல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சுவர் விளம்பரங்கள் அழிப்பது, போஸ்டர்கள் கிழிப்பது உள்ளிட்ட வேலைகள் நடந்து வருகின்றன. வேட்பு மனுக்கள் இன்று முதல் பெறப்படுகின்றன. மாநகராட்சி இணைய தளத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரது படங்களும், கோவையில் துவக்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்ட பணிகளில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

அப்படங்கள் அனைத்தும் இணைய தளத்திலிருந்து நேற்று நீக்கப்பட்டன. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக இருந்தாலும், தி.மு.க., கட்சி தலைவராக இருப்பதால், அவரது புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அறைகளில் இருக்கும் புகைப்படங்களையும் அகற்ற அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் திட்ட பணிகள் தொடர்பாக, கமிஷனர் ராஜகோபால் மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு செய்தது தொடர்பான செய்திகள், புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. அவையும் இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...