தேர்தல் நடத்தை விதிமுறையால் வர்த்தகர்கள் மற்றும் நகை தொழில் செய்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டதால் இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கம் கொண்டு செல்லவும், தேவையின்றி பொருட்களை பறிமுதல் செய்ய கூடாது என வியாபாரிகள், வர்த்தகர்கள் வலியுறுத்தல்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் வர்த்தகர்கள் மற்றும் நகை தொழில் செய்பவர்களுக்கு சிக்கல்: இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கம் கொண்டு செல்லவும் தேவையின்றி பொருட்களை பறிமுதல் செய்ய கூடாது என வியாபாரிகள், வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தனிநபர் ரொக்கம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள அளவை அதிகரிக்கவும் தேவையின்றி பொருட்களை பறிமுதல் செய்து உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என வர்த்தகர்கள் மற்றும் தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், முத்து வெங்கட்ராம் கூறியதாவது:-
ஒவ்வொரு முறை தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வரும்போதும் கோவையில் தங்க நகை தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுகிறது.
இத்தொழிலில் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தனிநபர் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கம் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்ற காரணத்தால் அடுத்த ஒரு மாதத்துக்கு தங்க நகை தொழில் கடும் பாதிப்பை சந்திக்கும்.
இன்று ஒரு சவரன் தங்கம் 40,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கம் ஒருவர் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டால் எவ்வாறு தொழில் நடத்துவது.
குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.
நகை தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து பட்டறை, நகைக்கடை என தினமும் கோவை மாவட்டத்தில் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் கிலோ கணக்கில் தங்க நகைகள் கொண்டு சென்று வருவது வாடிக்கையான ஒன்றாகும்.
ஆவணங்கள் மற்றும் விவரங்கள் கூறினால் உடனடியாக பறக்கும் படை அதிகாரிகள் அதை சரிபார்த்து தங்க நகைகள் மற்றும் வாகனத்தை விடுவிக்க வேண்டும். தேவையில்லாமல் நகைகளை பறிமுதல் செய்து கருவூலத்திற்கு கொண்டு செல்லக்கூடாது.
ஏனெனில் ஒவ்வொரு முறையும் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று அவற்றை மீட்டு கொண்டு வருவது தொழில் துறையினருக்கு உடல் அளவிலும் மனதளவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கோவையின் முன்னணி பம்ப் விற்பனை டீலர், டி. நந்தகுமார் கூறியதாவது:-
தினமும் தொழில் சார்ந்த வங்கி பரிவர்த்தனை செய்யும் வர்த்தகர்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்டார் பம்ப் செட் வாங்க வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலும் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பணத்தை தங்களுடன் கொண்டு வந்து மோட்டார் பம்ப்செட் வாங்கிச் செல்வது வழக்கம்.
இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கம் செலுத்தி பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வருமான வரித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும் தனி நபர் கொண்டு செல்ல அனுமதிக்கும் தொகை 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.
தேவையில்லாமல் வாகனங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யக் கூடாது. சாமானிய மக்கள், தொழில் துறையினர், வர்த்தகர்கள் பாதிக்காத வகையில் நடத்தை விதிமுறைகளை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.