குடியரசு தின விழா அலங்கார ஊர்தி கோவை வ.உ.சி மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு

குடியரசு தின விழா அலங்கார ஊர்தி தற்போது பொதுமக்கள் பார்வைக்காக வ.உ.சி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கு பெற்ற அலங்கார ஊர்தி கோவைக்கு வந்தது.

டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

இதையடுத்து 3 அலங்கார ஊர்திகளை தமிழகம் முழுவதும் வலம் வர சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.



அதன்படி ஒரு ஊர்தி கோவைக்கு வந்தடைந்தது. இந்த ஊர்தியில் மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராக வாச்சாரி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.



மேலும் இந்த ஊர்தியில் சுதேசி கப்பலும் சிதம்பரனார் சிறையில் செக்கிலுக்கும் காட்சிகளும் பாரதியார், சிதம்பரனாரின் சுதந்திர உணர்வு வரிகளும் இடம்பெற்றுள்ளன.



இந்த ஊர்தி தற்போது பொதுமக்கள் பார்வைக்காக வ.உ.சி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.



இந்த காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்து பார்வையிட்டார்.



ஞாயிற்றுக்கிழமை வரை இந்த ஊர்தி இங்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பார்வையிட வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.



முதல் நாளான இன்றே பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.



பலரும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.



முதல் நாளான இன்று பரதநாட்டியம், நிமிர் குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...