அரியலூர் மாணவி விவகாரத்தில் பழி தீர்க்க கோவை தேவாலய சிலை உடைப்பு; மேலும் ஒரு இந்து முன்னணி பிரமுகர் கைது

கோவை ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயத்தின் வாயிலில் இருந்த புனித செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தியதாக தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இந்து முன்னணி பிரமுகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவை ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயத்தின் வாயிலில் இருந்த புனித செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தியதாக தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இந்து முன்னணி பிரமுகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயத்தின்வாயிலில் இருந்த புனித செபஸ்தியர் சிலை கடந்த 23 ம் தேதி நள்ளிரவில் சேதப்படுத்தபட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பாக பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் அங்கு பதிவாகி இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளிகளை, அடையாளம் கண்டுகொண்டு, அந்த சிசிடிவி பதிவுகள் மூலம், இந்து முன்னணி அமைப்பினை சேர்ந்த நபர்கள் அந்த தேவாலயம் உள்ள பகுதியில் சுற்றி வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அந்த அமைப்பை சேர்ந்த 16-வயது சிறுவன் மற்றும் மதன்குமார் என்ற இளைஞர் எனஇருவரை கைது செய்தனர்.

இந்நிலையில், பிடிபட்ட 16 வயது சிறுவன் மற்றும் மதன்குமார் ஆகிய இருவரிடமும் நடத்திய விசாரணையில், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மூர்த்தி மற்றும் தீபக் ஆகயோருடன் சேர்ந்து சிலையை உடைத்ததையும், இதில், தீபக் தேவாலயத்திக்குள் சென்று செபஸ்தியர் சிலையை உடைத்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தனிப்படை போலீசார் தீபக் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரை தேடி வந்தனர். இந்நிலையில், இந்து முன்னணியை சேர்ந்த தீபக்கை போலீசார் கைது செய்தனர். மேலும்,தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வந்தனர்.

பிடிபட்ட குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாணவி மதமாற்ற விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு எதிர் வினையாற்றும் விதமாக, கோவை இராமநாதபுரம் டிரினிட்டிதேவாயலயத்தை சேதப்படுத்தியதாக பிடிபட்ட நபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவனை, சிறுவன் கூர்நோக்கு இல்லத்திலும், மதன்குமார் மற்றும் தீபக் ஆகிய இருவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இந்து முன்னணி பிரமுகர் மருதாச்சலமூர்த்தி என்ற வெள்ளலூரை சேர்ந்த மூர்த்தி ராமநாதபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...